மாமல்லபுரத்தில் களைகட்டிய தவெகவின் ‘மகளிர் தின’ கொண்டாட்டம்.!

Advertisements

மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற  மகளிர் தின விழாவில் பெண்களுக்கான வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் வெளியிட்டு இருக்கிறார்.. அவர் வெளியிட்ட வாக்குறுதிகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..!

1.  பெண்கள், குழந்தைகளுக்கு, முதியோருக்கு என தனி இலாகா உருவாக்கப்படும். அது எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

2.  60 வயது இருக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.2500 கொடுக்கப்படும். அரசு வேலைவாய்ப்பில் இருக்கும் பெண்களைத் தவிர மற்றவர்களுக்கு வழங்கப்படும்..

3.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.

4. பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்,  பட்டு சேலை அண்ணன் சீராக வழங்கப்படும்.

5. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பள்ளிக் கல்வி இடைநிற்றல் இல்லாமல் செய்வதற்காக தாய் அல்லது பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.

6. வெற்றி பயணம் திட்டமாக அனைத்து அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

7. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.

8.  மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

9. சுய உதவி குழுக்கள் மூலம் ரூ.5 லட்சம் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்படும்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *