
பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவிற்கு, சென்ற இந்திய பிரதமர் நரேந்திர-மோடிக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி கானா, டிரினிடாட் மற்றும் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக, கானா-டிரினிடாட் மற்றும் டுபாகோ ஆகிய இரண்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர், அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு இரண்டு நாடுகளிலும், அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்பின், அர்ஜென்டினாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில், பிரதமர் நரேந்திரமோடிக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார். இதுபற்றி பிரதமர் நரேந்திரமோடி செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பிரேசில் நாட்டின் ரியோ-டி-ஜெனீரோ நகரை சென்றடைந்துள்ளேன் என்றும், அதன்பின், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன் என்றும், பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவிற்கு செல்கிறேன் என்றும் இந்த பயணத்தில், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
