அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய!

Advertisements

Australian Open 2023 badminton

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்…

சிட்னி : ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார். இதில் ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு வீரரான இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவிலிருந்து மீண்டு 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜிங்டிங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

Australian Open 2023 badminton

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *