ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

English cricketer Alex Hales | Retirement | ODI

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்...

லண்டன் : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்.

34 வயதான அவர், இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 5,066 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாகக் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 86 ரன்களை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

English cricketer Alex Hales | Retirement | ODI

கடந்த 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அவர் அறிமுகமாகி இருந்தார். களத்துக்கு வெளியில் அவரது செயல்பாடு காரணமாக அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்கத் தவறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *