ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

Advertisements

ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி,  பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் இரு அணிக்கும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த இரு அணிகள் இதுவரை 120 டெஸ்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 61-ல் ஆஸ்திரேலியாவும், 33-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *