Ashwath Marimuthu: பிரதீப்புடன் கைகோர்க்கம் வெற்றிப் பட இயக்குனர்!

Advertisements

2006 ஆம் ஆண்டு வெளியான “திருட்டு பயலே” திரைப்படத்தின் மூலமாகத் தயாரிப்பு துறையில் கால் பதித்த நிறுவனம் தான் ஏ ஜி எஸ் கலை குழுமம்.

அதன் பின்னர் பல புதியவர்களை ஊகுவித்து வாய்ப்பு வழங்கிய பெருமையும் ஏ ஜி எஸ் நிறுவனத்துக்கு உண்டு எனலாம். ஆனால், சில படங்கள் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

குறிப்பாக, சந்தோஷ் சுப்ரமணியம், மைனா, தனி ஒருவன், பிகில் போன்ற படங்களைக் கூறலாம். கடந்த வருடம் தான் இவர்களின் தயாரிப்பு பயணத்தில் ஒரு நல்ல லாபத்தை கண்ட ஆண்டாகப் பார்க்கப்படுகிறது. ஆம், பிரதீப் ரங்கநாதன் அவர்களை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்து மாபெரும் ரிஸ்க் எடுத்து மாபெரும் வெற்றி கண்டது ஏ ஜி எஸ் நிறுவனம். ஆம், 8 கோடிகளில் படம் எடுக்கப்பட்டு சுமார் 100 கோடிகளை அள்ளியது இப்படம். இதன் பின்னர் தற்போது இவர்களின் தயாரிப்பில் வெளியாகி உள்ள கான்ஜூரிங் கண்ணப்பன் படமும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

“லவ் டூடே” திரைப்படம் வெற்றியடைந்தால் போடப்பட்ட ஒப்பந்தம் படி சுமார் இரண்டு முதல் மூன்று படங்களை ஏ ஜி எஸ் நிறுவனத்துக்குப் பிரதீப் செய்து கொடுக்க வேண்டும் என்பதே. தற்போது “LIC” திரைப்படத்தில் கமிட் ஆகி உள்ள பிரதீப், அதில் நடிக்க உள்ளார், இப்படத்தை முடித்தபின்னர் ஓ மைக்கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிக்க உள்ளார் என்றும் இப்படத்தை ஏ ஜி எஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், முன்னரே போடப்பட்ட ஒப்பந்தம் படி பிரதீப் அவர்களுக்குச் சுமார் 5 கோடிகளைச் சம்பளமாக வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், LIC படத்துக்கோ பிரதீப்புக்கு சுமார் 20 கோடிகளைச் சம்பளமாகச் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வழங்கி உள்ளது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *