உலகமே மேட்ச் பாக்குது.. ஆனா நெஹ்ரா நகம் வெட்டுறாரு..! ILP ஃபைனலில் சிரிப்பலை.!

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா செய்த செயல் இணையத்தில் பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் குஜராத் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்க, ஒட்டுமொத்த ரசிகர்களும் பதற்றத்தின் உச்சியில் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், டக் அவுட்டில் அமர்ந்திருந்த தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவோ, சுற்றிலும் நடக்கும் எந்தப் பதற்றத்தையும் சட்டே செய்யாமல், மிக நிதானமாகத் தனது கால் நகங்களை நெயில் கட்டரால் வெட்டிக் கொண்டிருந்தார்.

கேமராமேன் இந்த காட்சியைத் துல்லியமாகப் படம் பிடித்து நேரலையில் காட்ட, அந்தப் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது. “WHO CARES? மேட்ச் ஜெயிச்சா என்ன, தோத்தா என்ன… முதல்ல நகத்தை வெட்டுவோம்” என்ற மைண்ட் செட்டில் நெஹ்ரா இருந்ததாக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

போட்டியின் அழுத்தத்தை எப்படித் தன் பக்கமே நெருங்க விடாமல் நெஹ்ரா கையாண்டார் என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சியாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *