Arunachal Pradesh: கடும் நிலச்சரிவு.. சீன எல்லையை இணைக்கும் சாலை துண்டிப்பு!

Advertisements

சீன எல்லையை இணைக்கும் சாலையில் கனமழை காரணமாகக் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலைகளைச் சீரமைக்கும் வரை பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இடாநகர்: அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் சீன எல்லையை இணைக்கும் சாலையில் கனமழை காரணமாகக் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் திபாங் பள்ளத்தாக்கு பகுதிக்கு, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபாங் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சீன எல்லைப்பகுதியை இணைக்கும் சாலையான ஹூன்லி – அனினி தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் திபாங் பள்ளத்தாக்கு பகுதிக்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் பகுதிக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சாலைகளைச் சீரமைக்கும் வரை பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பெமா கான்டு கூறுகையில், ‘ஹூன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை அறிந்து வருந்துகிறேன். இந்தச் சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் இணைப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *