Assam: நண்பனுக்காகக் கஞ்சா பதுக்கிய பெண் ஐடி ஊழியர் கைது!

Advertisements

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உயர்ரக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சா கடந்தி வந்த பெண் ஐடி ஊழியரின் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்தாகவும், இதன் காரணமாகக் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் தொடர்ந்து புகார் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து போலீசார் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விநியோகத்தை கட்டுப்படுத்த சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சூளைமேடு சக்திவேல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகச் சூளைமேடு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கடந்த இரண்டு நாட்களாகப் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பை நோட்டமிட்டனர். போலீசார் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பு சென்று சோதனை செய்ததில் அசாம் மாநில நியூஸ் பேப்பர் சுற்றப்பட்டு ஒரு பண்டல் இருந்துள்ளது.

அதனைப் பிரித்துப் பார்த்தபோது, முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதனைப் பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்த 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளம் பெண்ணைக் கைது செய்து காவலில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷர்மிளா(25) என்பதும் ஓ.எம் ஆர் சாலையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கஞ்சாவிற்கும் தனக்கும் எந்த வித தொடர்பு இல்லையெனத் தெரிவித்தவர் தனது நண்பர் கொடுத்த பார்சலை மட்டுமே தான் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருத்தணியை சேர்ந்த ஹர்மிளாவின்  நண்பர் சுரேஷ் கஞ்சா கொடுத்து வைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸார் ஷர்மிளா மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த  சுரேஷ்சை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *