Armstrong Murder:சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுகட்டாகக் கைது!

Advertisements

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவுப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. . இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலைப் போலீசார் 6 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தச் சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த 8 பேரையும் கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கான காரணம்குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்குப் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களைப் போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *