
தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி தன்னுடைய 38வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ராம் இயக்கிய கற்றது தமிழ் படம்மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சலி. இதையடுத்து அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா என வரிசையாக ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது நடிகர் ஜெய்க்கும் நடிகை அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்ட நிலையில், இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
ஜெய் உடனான காதல் முறிவுக்கு பின்னர் நடிகை அஞ்சலிக்கு உடல் எடையும் அதிகரித்ததால் சினிமாவில் வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால் ஐட்டம் டான்ஸராக ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி வந்தார்.
அதன்பின்னர் மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவெடுத்த அஞ்சலி, சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி உடல் எடையைக் குறைக்கும் பணியில் இறங்கினார். யோகா மற்றும் தீவிர உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மான அஞ்சலி, பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அவருக்குத் தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தெலுங்கில் செம்ம பிசியாக நடித்து வருகிறார். தற்போது நடிகை அஞ்சலி கைவசம் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட படம் உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஞ்சலி. இதுதவிர ராம் இயக்கிய ஏழுகடல் ஏழு மழை படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில், நடிகை அஞ்சலி தன்னுடைய 38வது பிறந்தநாளை கடந்த ஜூன் 16ந் தேதி கொண்டாடினார். இதற்காகத் தாய்லாந்து சென்றிருந்த அஞ்சலி அங்குத் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சலி. அதைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் முரட்டு சிங்கிளாகப் பிறந்தநாளை கொண்டாடுவீர்கள் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


