
திருவண்ணாமலையில் மறைந்த முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மற்றும் திமுகவினர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலையில் மறைந்த முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு அதிமுக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அமைதி பேரணியாக வந்து அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன், இணை செயலாளர் சஹானா, நகர செயலாளர் செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் அதைத்தொடர்ந்து திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் கம்பன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியாக வந்து அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாநில பொறியாளர் அணி கருணாநிதி உட்பட மாவட்ட,ஒன்றிய, நகர கிளை கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

