Ariana: முதலமைச்சராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றார் நயாப் சிங் சைனி!

Advertisements

அரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 தொகுதியில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

பாஜக வெற்றி பெற்றதை அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து அவர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்குக் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும், பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *