Advertisements

நாட்டின் வாகன உற்பத்தித் துறையில் புத்தாக்கங்கள் தொடா்ந்து புகுத்தப்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, அண்மைக் காலங்களில் பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்திய வாகன உற்பத்தித் துறை, தனது சா்வதேச இருப்பை மேலும் விரிவுபடுத்தும் நிலையை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். இதுபோன்ற சூழலில், வாகன உற்பத்தித் துறையில் தொடா்ந்து புத்தாக்கங்கள் புகுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக வேகமாக வளா்ந்துவரும் முக்கியப் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
பொருளாதாரம் வளரும்போது, போக்குவரத்துக்கான தேவையும் அதிகரிக்கிறது என்று கூறினார். மேம்பட்ட சரக்குப் போக்குவரத்துக்கான வசதிகளால் செலவுகள் குறைந்து, நாட்டின் உற்பத்தித் துறை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது எனத் தெரிவித்தார். அரசின் சீா்திருத்தங்களால் போக்குவரத்து துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது என்றும், உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகன உற்பத்தித் துறையின் திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
Advertisements



