Aravakurichi MLA: 70% பணிகள் முடிவடைந்துள்ளதாக MLA பேச்சு!

Advertisements

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், சாலை மற்றும் குடிநீர் பணிகள் தற்போது 70% வரை நிறைவடைந்துள்ளது எனவும், மீதமுள்ள 30 சதவீதம் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் எனத்சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தெரிவித்தார்.

கரூரில், ரூபாய் 440.63 கோடி மதிப்பீட்டில், 756 ஊரக குடியிருப்புக்கான புதிய குடிநீர் திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் குடிநீரை திறந்து வைத்தனர்.

கரூர் மாவட்டத்தில், கடும் வறட்சி பகுதியாக இருக்கும் அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 756 ஊரக குடியிருப்புகளுக்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி மூலமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் குடிநீரை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில், சாலை மற்றும் குடிநீர் பணிகள் தற்போது 70% வரை நிறைவடைந்துள்ளது எனவும், மீதமுள்ள 30 சதவீதம் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *