Answering: உன் பிதாவாகிய தேவன் உன் விண்ணப்பங்களைக் கேட்டு அவற்றிற்குப் பதிலளிக்கிறார்!

Advertisements

ஆண்டவர் ஒருபோதும் உன் நிமித்தம் சோர்ந்துபோக மாட்டார்

 

புதிதாகப் பிறந்த குழந்தையின் வாழ்க்கைக்கு முதல் சில மாதங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம். குழந்தைகளின் பால்புட்டிகள், டயப்பர்கள் போன்றவற்றின் மீது தொடர் கவனம் செலுத்தி, தொடர்ந்து தங்கள் குழந்தையைக் கவனித்துக்கொண்டு இருப்பதால், பெற்றோரின் இரவுகள் குறுகியவையாகவும் அவர்களின் பகல் நேரங்கள் நீண்டவையாகவும் காணப்படுகின்றன.

இப்போது, இதோ ஒரு கேள்வி… தாய் எவ்வளவு அதிகமாகக் களைப்படைந்திருந்தாலும், அவள் தன் குழந்தையிடம், “உண்மையிலேயே சொல்கிறேன், இப்போதே, பிடிவாதத்தை நிறுத்து… கொஞ்சமாவது நீயாக வேலை செய்! என்னால் உனக்கு உதவ முடியாது,  நீயாகவே செய்துகொள்!” என்று சொல்வாளா?

நிச்சயமாகச் சொல்லமாட்டாள்! அதற்குப் பதிலாக, அவள் விடாமுயற்சியுடன், தன் குழந்தைக்கு நம்பிக்கையூட்டி, கவனித்துக்கொள்கிறாள். எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தனது சிறிய குழந்தையின் அழுகையை ஆற்ற அவள் ஒவ்வொரு இரவிலும் பல முறை எழும்புகிறாள்.

இதைப்போலவே, உன் பிதாவாகிய தேவன் உன் விண்ணப்பங்களைக் கேட்டு அவற்றிற்குப் பதிலளிக்கிறார்.

“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”  (வேதாகமத்தில் சங்கீதம் 34:15ஐப் பார்க்கவும்)

இந்தப் பூமியில் 700 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர்… இருப்பினும், ஆண்டவர் உன் அழுகையின் சத்தத்தைக் கேட்கிறார் மற்றும் உனக்குத் தனிப்பட்ட விதத்தில் பதிலளிக்கிறார். அவருடைய அன்பு நீ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் ஆழமானது. உன்மீதான அவரது இரக்கம் ஈடு இணையற்றது, அது சூழ்நிலைகளைச் சார்ந்ததல்ல, மாற்றத்திற்கு உட்பட்டதும் அல்ல.

உன்னைக் கவனித்துக்கொள்வதிலும், உன்னிடம் பேசுவதிலும், உன்னுடன் நடப்பதிலும், உன்னை ஆறுதல்படுத்துவதிலும் ஆண்டவர் ஒருபோதும் சோர்வடைவதில்லை. அவருடைய அன்பான பார்வை உன் வாழ்நாள் முழுவதும் உன்மீது இருக்கிறது. நீ களிகூரும்போது அவர் உன்னுடன் சேர்ந்து களிகூருகிறார், நீ சோகமாக இருக்கும்போது அவரும் உன்னோடு சேர்ந்து சோகமாக இருக்கிறார். அவர் உன்மீது இரக்கம், நன்மை, மற்றும் மனதுருக்கம் ஆகியவற்றை தொடர்ந்து பொழிந்தருளுகிறார்.

உனக்கு “இது போதும்” என்று ஆண்டவர் ஒருபோதும் சொல்லமாட்டார். நீ அவரைச் சலிப்படையச் செய்வதில்லை, அவர் உன் நிமித்தம் சோர்வடைவதில்லை.  நீ அவருடைய அன்பு மகன் / அன்பு மகள்!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *