Asia : ரகசா புயலின் தாக்கத்தால் , தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் உயிரிழப்பு.!

ஆசியாவில் ரகசா புயலின் தாக்கத்தால், தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் உயிரிழந்தனர், ஹாங்காங்கில் 100 பேர் காயமடைந்தனர்.

ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில், வலிமையான புயல்களில் ஒன்றாக ரகசா புயல், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தைவான் மற்றும் பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றது.

தைவானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, சாலைகள் முழுவதும் தேங்கியது. வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தைவானில் 17 பேர் உயிரிழந்தனர். 124 பேரை காணவில்லை. நூறு பேர் காயமடைந்தனர்.

ஆயிரம் பேர் வசித்து வந்த, தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேபோன்று பிலிப்பைன்சின் வடக்கே 10 பேர் உயிரிழந்தனர். மொத்தத்தில், ரகசா புயலால், தைவான், பிலிப்பைன்சில் 27 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *