
அங்கோர் வாட், சிறப்புமிக்க கலைநயத்துடன் கோவில்! கம்போடியாவில்…
அன்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோவிலையும் குறிக்கும். அங்கோர் வாட் கம்போடியாவில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இது முதலில் இந்துக் கோவிலாக இருந்து பின்பு புத்த கோவிலாக மாறியுள்ளது. உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாகும். கெமீர் இனத்தைச் சேர்ந்த சூரியவர்மனால் கட்டப்பட்டது. இக்கோவில் சைவ சாம்ராஜியத்தை உடைக்கும் பொருட்டு விஷ்ணு கோவிலாக மாற்றப்பட்டது. கம்போடிய நாட்டு சின்னமாக அந்நாட்டின் கொடியில் இடம் பெற்றுள்ளது.

இக்கோவில் சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட இக்கோவில் விஷ்ணூவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. 13-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கோவில் மிக அசாதாரணமானது. கோவில் கட்டியது குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டாலும், அங்குக் கிடைத்த கல்வெட்டுகளின் மூலம் அங்கோர் கோவில் தனித்து இருப்பது அறியப்பட்டது. இக்கோவில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது.

மத்திய கோபுரங்கள் மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிப்பதாக உள்ளது. சுவர்களூம், அகழியும் பிற மலைத் தொடர்களைக் குறிக்கிறது. இதில் உள்ள மூன்று சதுர கூடங்கள் மற்றும் கோபுரங்கள் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அழகிய பெண் உருவங்கள், நடன உருவங்கள், அப்சரஸ்கள், விலங்குகள், மற்றும் ஆண் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் புடைப்புச் சிற்பங்கள், மகாபாரதக் காப்பியங்கள், கூரைகள் பாம்புகளின் உடல்கள், சிங்கம், கருடன் தலை போன்றவை மட்டுமல்லாது, சில விசித்திரமான உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

அகழி மற்றும் அதனைச் சுற்றி புல்வெளிகள் அமைந்த பூங்காக்கள் உள்ளன. 1980 மற்றும் 1982 -களில் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் கோவில் புதுப்பித்தல் பணியினைச் செய்தது. அதன் பிறகு சுற்றுலா தலமாகப் புகழ் பெற்றது. 2008-ல் பாற்கடல் கூடத்தை, உலக நினைவிடங்கள் பல ஆய்வுகளைச் செய்து பல மாற்றங்கள் கொண்டு வந்தபின்பு, சுற்றுலா பயணிகள் வரவு ஆறு லட்சத்துக்கும் மேல் பெருகியது.

இங்கும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, போர்ச் சேதம், இயற்கை சீற்றங்களால் சேதமுற்று உள்ளது. மறு சீரம்மைப்புகள் தொடர்ந்து நடைபெற்று புதுப்பொலிவுடன் மிளிர்கிறது. 1992 -ல் கம்போடிய மன்னர் நொரோடாம் சீயனூக், யுனெஸ்கோவின் உதவியுடன் மரபுச் சின்னக்கள் பட்டியலில் இடம் பிடித்தது. மேலும் இக்கோவிலைப் பாதுகாப்பதற்காக, அப்சரா ஏனும் பெயரில் பாதுகாப்பதற்காகச் சட்டமும் இயற்றப்பட்டது. பிரான்ஸ், ஜப்பான், சீனா போன்ற நாடுகள் அங்கோர் வாட் கோவிலைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

