Tambaram: குப்பை வண்டியில் அமைச்சர்கள் அமர்ந்த நாற்காலி!

Advertisements

தாம்பரத்தில் அமைச்சர்கள் அமர்ந்த நாற்காலியை மாநகராட்சி குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வண்டி வாடகையை நூதன முறையில் கையாடல் செய்வதற்காகக் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் பேருந்து நிலையம் தமிழக அரசின் டிஜிட்டல் விளம்பர பலகை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன்,. தாமோ.அன்பரசன், மேயர் வசந்தகுமாரி, சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த அமைச்சர்கள் சென்ற நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், மேயர் அமர்ந்த நாற்காலிகளைத் தாம்பரம் மாநகராட்சி குப்பை வாகனத்தில் ஏற்றி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்ல இருந்தனர்.

இது தொடர்பாகக் குப்பை வண்டியில் நாற்காலியை ஏற்றுவதை  செய்தியாளர்கள் வீடியோ எடுத்தை கவனித்த தூய்மை பணியாளர்கள் இது தொடர்பாகச் சுதாகாரத்துறை அலுவலருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாகக் குப்பை வண்டியிலிருந்து இறக்கப்பட்ட நாற்காலிகள் வேறு வாகனம்மூலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குப்பை வண்டியில் அமைச்சர்கள் அமர்ந்த நாற்கலியை எடுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் முகசுழிப்பை ஏற்படுத்தியது.

வண்டி வாடகையை நூதன முறையில் கையாடல் செய்வதற்காகக் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *