
நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேற்றிக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இரண்டாண்டுக்கு ஒருமுறை வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள்செய்யப்பட்டுநடந்துவரும்
அதன் ஒரு பகுதியாக 8-வது நாளான இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்னுக்கு செலுத்தி நேற்று கடன் செலுத்தினர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது, இத்திருவிழாவிற்கு சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கமலின் அருள் பெற்று சென்றனர், விழா ஏற்பாடுகளைத் தக்கார் பாலசரவணன் மற்றும் விழா குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர் …

