Andhra:1-ந்தேதி முதல் ரூ.99-க்கு `கிக்’கான மது அறிமுகம்!

Advertisements

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் மதுபான கடைகள் அனைத்தும் தனியார் மயமாகப்படுகின்றன.

இது தொடர்பாக மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் குறைந்த விலையில் தரமான மதுபானங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய மதுபான கொள்கைகளின் படி ஆண்டுக்கு ரூ.2000 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

99 ரூபாய்க்கு தரமான கிக் கான மது விற்பனை செய்ய வேண்டும். அதற்கும் குறைவான விலையில் மதுபானங்கள் அறிமுகம் செய்யபட உள்ளது.

12 நகரங்களில் பிரீமியம் கடைகள் திறக்கப்பட உள்ளன. அரசு ஒதுக்கும் தனியார் மதுபான கடைகளை 10 சதவீத கடைகள்கள் இறக்கும் தொழிலாளர்களுக்காக ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சட்டவிரோத மதுபான விற்பனை தடுக்கப்படும். அரசுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும். ஏற்கனவே கடந்த ஆட்சியில் இருந்த மதுபான கொள்கைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மது ஆந்திராவில் விற்பனைக்குக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் உடல் நலம் பாதிக்காத வகையில் மதுபான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *