Andhra: லாரி, பஸ் மோதிக் கோர விபத்து – 8 பேர் பலி!

Advertisements

ஆந்திராவில் லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி:ஆந்திர மாநிலம் பலமனேரு நகரிலிருந்து சித்தூர் நோக்கி இன்று மாலை அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

நெடுஞ்சாலையில் மொலிகி கட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 8 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *