2027ஆம் ஆண்டில் புல்லட் ரயில் – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

மும்பை – அகமதாபாத் இடையான புல்லட் ரயில் திட்டத்தில் சூரத் – பிலிமோரா இடையான முதல் பிரிவில் 2027ஆம் ஆண்டில் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத் தலைநகர் மும்பைக்கும் குஜராத்தின் அகமதாபாத்துக்கும் இடையே 510 கிலோமீட்டர் தொலைவுக்குப் புல்லட் ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஜப்பான் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாதை தரைக்குக் கீழும், உயர்மட்டப் பாலத்திலும் என இருவகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் புல்லட் ரயில் பாதைப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
breath
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புல்லட் ரயில் திட்டத்தில் சூரத் – பிலிமோரா இடையான 70 கிலோமீட்டர் தொலைவுக்கான பாதை முதற்கட்டமாக 2027ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
இந்தத் தடத்தில் மணிக்கு 340 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் வகையில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *