Advertisements

திமுகவுடன் கூடுதல் தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் பதவி என நீண்ட கோரிக்கை வைத்து போர் கொடி பிடித்த காங்கிரஸ் கட்சி தற்பொழுது இறுதி முடிவுக்கு வந்திருக்கிறது . மீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி இறுதியாகியிருக்கிறது . அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் சந்தித்து பேசிய நிலையில் கூட்டணி பற்றிய இறுதி முடிவு உறுதியாகி இருக்கிறது .
காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பல வாய்ப்புகளை திமுக வழங்குவதாக அறிவித்து . அதற்கு காங்கிரஸ் கட்சியும் சம்மதம் தெரிவித்துள்ளது .
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிட்டன . .இதில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டது .
தற்போது தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் . அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியினர் வைத்து வந்தனர் . திமுக தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தமிழக வெற்றி கழகத்தினுடனும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன.
தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் 60 தொகுதிகள் தருவதாகவும் துணை முதல்வர் பதவி தருவதாகவும் பேசப்பட்டது . இந்த நிலையில் , கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை இழக்க விரும்பாத மு க ஸ்டாலின் தற்பொழுது அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறார் .
அந்த முடிவின்படி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி டெல்லி சென்று சோனியா காந்தி இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார் .
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே இறுதி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது . தற்போது ராகுல் காந்தி கனிமொழி ஆகியோரது சந்திப்பு தமிழக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . நீண்ட நாட்களாக நிலவி வந்த தொகுதி பங்கீடு இழுபறி விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது .
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 36 தொகுதிகளை ஒதுக்கி தருவதாக திமுக தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது . தேவைப்பட்டால் இன்னும் இரண்டு தொகுதிகள் கூடுதலாக தரவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இது தவிர இரண்டு ராஜ்யசபா இடங்களை காங்கிரசுக்கு வழங்க திமுக முன் வந்துள்ளது .
இது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துணை சபாநாயகர் பதவி தருவதற்கும் திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஐந்து அரசு வாரிய தலைவர்கள் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நல வாரிய தலைவர்கள் பதவிகளில் காங்கிரஸுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் .
உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது . இது குறித்து கனிமொழி நடத்திய பேச்சு வார்த்தையில் ராகுல் காந்தி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது . இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி திமுக உடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறது என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது .
மேலும் எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகிறது . இதற்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் இணையலாம் என்கிற கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மு க ஸ்டாலின் திடீரென தனது முடிவை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளும் மேற்கொண்டு பல சலுகைகளையும் வழங்கி காங்கிரஸ் கட்சியை தன் பக்கம் வசமாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …
Advertisements

