2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய உறுதிமொழிகளை நாலரை ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் பாயும் ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவு உள்ளிட்ட அனைத்துக் கழிவுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதையும், அதை இன்றுவரை நிறைவேற்றாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் பழவேற்காடு, வேடந்தாங்கல், கரிக்கிளி, கரைவெட்டி, உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், சித்திரங்குடி, கூந்தங்குளம், வெள்ளோடு, மேல்செல்வனூர், வேட்டங்குடி ஆகிய பறவைகள் சரணாலயங்களில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூறிய உறுதிமொழியை நிறைவேற்றாததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதற்கு உரிய திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியதைத் திமுக நிறைவேற்றவில்லை என அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.


