ஒரே நாளில் 8 கொலைகள்… தமிழகம் கொலை மாநிலமா ?

Advertisements

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தாலே சட்ட ஓழுங்கு சரியாக இருக்காது என்பது எழுதபடாத விதி. அப்படிதான் ஜுன் ஒன்றாம் நடந்த கொலைகளைக் கணக்கில் எடுத்தாலே அது உண்மைதான் என்பது புரியும். அதைப் பற்றிதான் பார்க்கபோகிறோம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். கடை முன் நின்று கொண்டிருந்த அவர், திடீரென மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆத்திரமடைந்த பிரகதீஸ்வரனின் நண்பர்கள் சிலர், அரிவாளுடன் செண்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவன், என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டின் முன் தனியாக நின்று கொண்டிருந்த சதீஷ் மாதவனின் தாய் கஸ்தூரியை அந்தக் கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியோடியது. தடுக்க முயன்ற உறவினர் செண்பகராஜ் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.இந்தக் கொலை நடந்த அரைமணி நேர இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நிகழ்ந்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணையைத் துவக்கினர். டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர்.

எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், கொலை நடந்த இடங்களைப் பார்வையிட்டுக் கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகளை அமைத்தார். கொலைகள் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த சதீஷ் மாதவன், செல்லதுரை, உட்பட 8 பேரைப் பிடித்துத் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரன், கோவில் வளாகத்தில் வைத்து மது அருந்திய சதீஷ் மாதவன், அவரது நண்பர்களைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாகத் தகராறு ஏற்பட்ட நிலையில், சதீஷ் மாதவன் மீது கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஏப்ரலில் தன் நண்பர் திருமண நிகழ்ச்சியில் பிரகதீஸ்வரன் வைத்த டிஜிட்டல் பேனரை சதீஷ் மாதவன் கிழித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பிரகதீஸ்வரனையும், அவரது தந்தை ஆனந்தனையும் கொலை செய்துவிடுவதாகச் சதீஷ் மாதவன் மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆனந்தன் ஏப்.ரல் 29ல் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பினர். இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டதை போலீசார் அலட்சியமாகக் கையாண்டதால், இப்போது இந்த இரட்டை கொலை நடந்துள்ளது.

மேலும், பிரகதீஸ்வரனும், சதீஷ் மாதவனும் நண்பர்களாகவே பழகியுள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரது கட்டுப்பாட்டில் இருவரும் இருந்துள்ளனர். அவர் சிறைக்கு சென்றதால், யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டதால், இருவரும் தனித்தனியே ஆட்களைச் சேர்த்துக்கொண்டு, ரேஷன் அரிசி கடத்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அரிசி கடத்தலில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவும் கொலைகள் நடந்திருக்கலாமென, கூறப்படுகிறது.

இதற்கிடையே, து£த்துக்குடி மாவட்டத்தில், சொத்து தகராறில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டையால் அடித்துக் கொலை செய்ததாக முதியவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அம்பலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி, தனியாக வசித்து வந்தார். ஜூன் ஒன்றாம் தேதி நள்ளிரவு, சுயம்புகனி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.கோவில்பட்டியில் இருவர் வெட்டிக் கொலை;  அரைமணி நேரத்தில் அடுத்தடுத்த கொடூரம் விசாரணையில், சுயம்புகனிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான தங்க பாண்டி,  என்பவருக்கும் சொத்து தகராறு இருப்பது தெரியவந்தது. சொத்து தகராறில், அவர் சுயம்புகனியை கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்ததால் போலீசார், அவரை நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கூடலுரை சேர்ந்தவர் விஜய். நடுக்காவேரியை சேர்ந்த அருண்குமார். இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள். இருவரும் ஜூன் ஒன்றாம் தேதி நண்பர்களுடன், நடுக்காவேரி அருகே மணகரம்பையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, மது வாங்க சென்றனர். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருண்குமார், விஜய் இருவருக்கும், யார் முதலில் மது வாங்குவது என, தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அருண்குமார், காலி மதுபாட்டிலை உடைத்து விஜயை குத்தினார். விஜய் படுகாயமடைந்தார். அருண்குமார், அவரது நண்பர்கள் தப்பியோடினர். நடுக்காவேரி போலீசார் காயமடைந்த விஜயை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டியை சேர்ந்த பரமசிவன், மனைவி உமா, ஜூன் ஒன்றாம் தேதி கழுத்தறுத்து கொல்லப்பட்டார். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இதில், பரமசிவன் வீட்டுக்கு அருகில் வசித்த மணிக்குமார், ஆட்டுத்தோல் பதப்படுத்தும் தொழில் செய்து வந்ததும், பரமசிவன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மணிக்குமார் உதவி செய்ததும், அப்போது உமாவுடன் மணிக்குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதைப் பரமசிவன் கண்டித்ததால், உமா ஓராண்டாக மணிக்குமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், தன்னிடம் பழக வலியுறுத்திய மணிக்குமார், மறுத்த உமாவை கழுத்தறுத்து கொன்றுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அடுத்த சண்முகாபுரத்தில் எஸ்.ஜே., கல்குவாரியில், மதுரையைச் சேர்ந்த ராஜசேகரன், பொள்ளாச்சியை சேர்ந்த மனோஜ்குமார், வாட்ச்மேன்களாகப் பணிபுரிந்தனர். மொபைல் போன் சார்ஜ் போடுவதில், ஜூன் ஒன்றாம் தேதி இரவு 11: மணிக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனோஜ்குமார் கட்டையால் தாக்கியதில், ராஜசேகரன் தலையில் காயம்டைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கடலுர்ர் மாவட்டம், சின்னக் கங்கணாங்குப்பம் தனியார் பேட்டரி கடை முன் ஜூன் ஒன்றாம் தேதி காலை, 40 வயது மதிக்கத் தக்க ஆண் நபர், ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலின் அருகே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. ரெட்டிச்சாவடி போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக கடலு£ர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வடுகபாளையம், பொன்முத்து நகரை சேர்ந்த கண்ணன் – வனிதா தம்பதியின் மூத்த மகள் அஸ்விகா; மலுமிச்சம்பட்டி தனியார் கல்லு£ரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு மாணவி. ஜூன் ஓன்றாம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், அஸ்விகா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்கு வந்த அவரது காதலர், கத்தியால் குத்தி அஸ்விகாவை கொலை செய்து விட்டு, தாலுகா போலீசாரிடம் சரணடைந்தார்.

இந்தக் கொலை தொடர்பாகப் போலீசார் கூறியதாவது: அண்ணாமலையார் நகரை சேர்ந்த பிரவின்குமார், தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். பொன்முத்து நகரில், அஸ்விகா வீட்டின் அருகே குடியிருந்தபோது, இருவருக்கும் ஐந்து ஆண்டுகளாகப் பழக்கம் உள்ளது. இருவரும் காதலிப்பது தெரிந்து, திருமணம் செய்து வைக்க இரு வீட்டிலும் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அஸ்விகா திருமணம் செய்ய மறுத்ததாகவும், சமூக வலைதளங்களில் கல்லு£ரி நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி வீட்டுக்குச் சென்ற பிரவின்குமார், அஸ்விகாவிடம் இதுகுறித்து கேட்டபோது, கோபமடைந்த பிரவின்குமார், அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்ஆகத் தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு கொலைகள் நடந்துள்ளன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா. இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதம்தான் இருக்கிறது. தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-செய்தித்தொகுப்பு : குட்டிக்கண்ணன் Gem Tv

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *