Tvk Conference:நாளை மறுநாள் பூமி பூஜை …தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!

நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் எனக் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்:விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாநாடு நடைபெற உள்ளது . 27ம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த மாநாட்டில் தான் கட்சி கொடியின் அர்த்தத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்சியின் கொள்கைகளும் இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் இந்த மாநாட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாளை மறுநாள் காலை 8 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் எனக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.பூமி பூஜைக்குப் பின் மாநாட்டு திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *