மத்திய அமைச்சருடன் அன்பில் மகேஷ் சந்திப்பு..!

Advertisements

தில்லியில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தில்லிக்குச் சென்றிருந்தார். அவரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நேற்றுத் தில்லியில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு 2024 – 2025ஆம் ஆண்டுக்கான நிலுவையிலுள்ள சமக்ரா சிக்சா நிதியையும், 2025-2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியையும் உடனடியாக வழங்க வலியுறுத்தினர்.

அப்போது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சந்திர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *