Anas: எதையும் தயார் செய்யவில்லை அண்ணலாரின் அன்பைத் தவிர…

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்…

ஒரு கிராமத்தைச் சேர்ந்த அரபி ஒருவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எப்போது மறுமை நாள் உலகம் அழியும் நாள் வரும் என்று கேட்டார் அவரிடம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நாளுக்காக என்ன தயார் படுத்தி வைத்திருக்கிறாய் என்று கேட்டார்கள் அதற்கு அவர் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் முழுமையாகப் பிரியம் வைத்துள்ளேன் என்று கூறினார் அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ யாரை நேசித்தாயோ அவர்களுடனே இருப்பாய் என்று கூறினார்கள் – Anas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *