Truecaller: புதிய அம்சங்கள்!

Advertisements

ட்ரூ காலர் தரப்போகும் புதிய அம்சங்கள்! என்னனென்ன? அது எப்போதிலிருந்து தெரியுமா?

இன்று உலகமெங்கும் பலரது அலைபேசிகளில் கட்டாயம் இடம் பெறும் செயலிகளில் ஒன்று ட்ரூ காலர். ஆம், எப்படி வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமென இந்தச் செயலிகள் நம் அலைபேசியில் முக்கிய இடம் பிடித்துள்ளதோ அதே போன்று ஒரு முக்கியமான பெரிதும் பயன்படும் செயலி ட்ரூ காலர்.

சேமிக்கப்படாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அந்த நபர் யார் எங்கிருந்து அழைக்கிறார் என்கிற தகவலை உடனடியாகக் கொடுத்து விடுகிறது. சில வருடங்களாக ட்ரூ காலர் பயனர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் களவாடுவதாக ஒரு செய்தி பரவிய நிலையில், இதைப் பயன்படுத்தும் பயனர்கள் பெரிதும் அவதியடைந்தனர். ஆனால் அது வதந்தியெனப் பின்னாளில் தெரிய வந்தது.

சுமார் 250 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் ட்ரூ காலர் செயலி போலி அழைப்புகள், லோன் அழைப்புகள், தெரியாத எண்களிலிருந்து வரும் ஸ்பேம் கால்ஸ், மெசேஜ் என இவற்றைக் கண்டறிந்து பயனர்களுக்குத் தெரியப்படுத்தும். இது தமது பிரீமியம் சேவையும் வழங்கி வருகிறது. அதாவது பணத்தை செலுத்தினால் இன்னும் கூடச் சில விவரங்களை நமக்குத் தேடி தரும் அம்சமும் உண்டு.

இந்த நிலையில் இதன் ட்ரூ காலர் தலைமை நிர்வாகம் ட்ரூ காலரை செயலியை ரீப்பிராண்ட (REBRAND) செய்து, அதாவது புதிய லோகோ, புதிய செட்டிங்ஸ் மாற்றங்கள் என இவற்றைச் செய்து வெளியிட உள்ளது. அதற்குப் பயனர்கள் அப்டேட் செய்யப்பட்ட புதிய வேர்ஷன் ஐ பதிவிறக்க வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது. ஏனென்றால் புதிய வேர்ஷன்னில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு பல மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் எனவே முன்பு இருந்ததை விடப் பயனர் பாதுகாப்பில் இன்னும் மேம்படுத்தப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி இந்தப் புதிய வேர்ஷன் வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒரு ஐடியின் பெயர் எப்போது மாற்றப்பட்டது என்பதை கண்டறிய நீல, மஞ்சள், சிவப்பு நிறங்களில் நோடிஃபிகேஷன் வரும் எனவும். நீல நிறம் வந்தால் எப்போதாவது பெயர் மாற்றியவர் என்றும், மஞ்சள் வந்தால் சில பல முறை பெயர் மாற்றியவர் என்றும், சிவப்பு நிறம் வந்தால் அது போலியான எண் மற்றும் ஏமாற்றும் ஐடியாக இருக்கலாம் என்பதை பயனர்கள் கண்டறிந்து கொள்ள முடியும்.

மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்ரூ காலர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யும் எனவும் தெரிய வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *