பயங்கரவாதிகளே இல்லாத பகுதியாக மாறிய காஷ்மீர் – அமித் ஷா பெருமிதம்!

உள்ளூர் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக காஷ்மீர் தற்போது மாறியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா தெரிவித்துள்ளார்.

தில்லியில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இரண்டு நாட்கள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினார். அப்போது இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படும் குற்றவாளி கும்பல்களை ஒடுக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுவதாகத் தெரிவித்தார். வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு பயங்கரவாதி, குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரையும் மீண்டும் அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மாநில எல்லைகளைத் தாண்டிச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, மாநிலக் காவல்துறையினரும், மத்திய விசாரணை அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜம்மு – காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி லத்தீப் பட் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக காஷ்மீர் தற்போது மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.  இது ஒரு முக்கிய மைல்கல் என்றும் குறிப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *