அமெரிக்கா-சீனா மோதல் ஆரம்பம்..! இந்தியாவுக்கு என்ன பாதிப்பு..?

Advertisements

சீனா பொருட்கள் மீது அமெரிக்கா 104% அளவுக்கு வரியை விதித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உச்சத்தை எட்டியிருக்கிறது. இது இந்தியாவையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலகம் முழுவதும் 43% பொருட்களின் விநியோகத்தை சீனாவும், அமெரிக்காவும் கைக்குள் வைத்திருக்கின்றன. இப்படி இருக்கையில் இரு நாடுகளும் வர்த்தக போரில் ஈடுபட்டால் அது உலகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீன பொருட்கள் அமெரிக்காவில் விற்பனையாவது சரியும். 2024ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பொருட்கள் வர்த்தகம் $585 பில்லியன் என்கிற அளவில் இருந்து வந்தது. இதில் சீனாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள்தான் அதிகம். அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு குறைவாகவே பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. அதாவது அமெரிக்கா சீனாவிலிருந்து $440 பில்லியன் அளவுக்கு இறக்குமதி செய்தது. மறுபுறம் சீனா அமெரிக்காவிலிருந்து $145 பில்லியன் மட்டுமே இறக்குமதி செய்திருந்தது. எனவே இரு நாடுகளுக்கு இடையில் $295 பில்லியன் அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு, சோயாபீன்ஸ், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மருந்துகள், எரிபொருட்கள் ஏற்றுமதியாகின்றன. பதிலுக்கு சீனா மின்னணுப் பொருட்கள், கணினிகள், பொம்மைகள், மின்சார வாகன பேட்ரிகள், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. இப்பபோது சீனா மீதான வரி உயர்த்தப்பட்டிருப்பதால், சீன பொருட்கள் அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனையாகும். எனவே அந்நாட்டு மக்கள் சீன தயாரிப்பை புறக்கணிப்பார்கள்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *