Alwarthirunagari: நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அட்டூழியம்!

Advertisements

ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்த்திருநகரி பகுதியில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் அரசுப் பேருந்து உள்ளிட்ட இரண்டு வாகனங்களை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி கொள்ளை கும்பலாக இருக்கும் எனப் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு நேற்றிரவுகம்பத்திலிருந்து திருநெல்வேலி வழியாகத் திருச்செந்தூர் நோக்கி 40 -க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து வந்துள்ளது. அப்போது ஸ்ரீவைகுண்டம் அடுத்த ஆழ்வார்த்திருநகரி அருகேவந்த அரசு பேருந்தினை மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்துமீது கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளனர். மேலும் பேருந்து அருகே வந்த மர்ம நபர்கள் பேருந்துக் கதவுகளை திறக்கச்சொல்லிஅரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பேருந்தினை வெட்டியுள்ளனர்.

மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில்அரசு பேருந்து நடத்துநர் கார்த்திகேயன் தலையில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து பதற்றமடைந்த பயணிகள் உடனடியாகப் பேருந்ததினை எடுக்கச் சொல்லிக் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சுடலைமணி உடனடியாகப் பேருந்தினை இயக்கி அருகில் உள்ள ஆழ்வார்த்திருநகரி அரசு மருத்துவமனையில் காயமடைந்த நடத்துநர் மற்றும் பயணிகளைச் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். மேலும் நேற்று நள்ளிரவில் அதே பகுதிமில் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள்மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

நள்ளிரவு நேரம் என்பதால் கொள்ளைக்கும்பலாக இருக்கலாம் எனவும் வழிப்பறி செய்வதற்காகப் பேருந்தினை வழிமறித்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி காவலர்கள் பாதுகாப்புடன் பேருந்தினை இயக்கிவந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *