கால்நடைகளை திருடும் மர்ம ஆசாமிகள்..!

Advertisements

விவசாயத் தோட்டத்தில் இருக்கும் கால்நடைகளை நோட்டமிட்டு திருடும் மர்ம ஆசாமிகளை வாழப்பாடி காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சபரீஸ். இவர் கடந்த 8 ஆம் தேதி தனது விவசாயத் தோட்டத்தில் கட்டியிருந்த 2 மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாகக்கூறி சபரிஸ் வாழப்பாடி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி காவல்துறையினர் மாயமான மாடுகளையும், மர்மநபர்களையும் தேடி வந்தனர். இந்நிலையில், தலைவாசல் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.அப்போது மினி டெம்போவில் இரண்டு மாடுகளை விற்பனைக்காக ஏற்றி சென்ற நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மாடுகளை விற்பனைக்காக திருடி சென்றது தெரிய வந்ததது. இதை தொடர்ந்து, மேட்டுப்பட்டியைச் சேர்ந்த இருவரை கைது செய்த காவல்துறையினர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இரண்டு மாடுகளையும் சபரீஸிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *