சிந்து நதிநீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான்!

முப்பது கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சிந்து ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய  அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, சிந்து ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி அப்பாவி மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்ற செயலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதச்செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *