
A. Anwhar Raajhaa | AIADMK
அதிமுகவில் இன்று மீண்டும் இணைகிறார் முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா…
எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக உடைந்தபோது ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்ற அன்வர் ராஜா, 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துகொண்டார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அதிமுகவே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் அன்வர் ராஜா.
2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால், அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார்.
A. Anwhar Raajhaa | AIADMK | Rejoin
சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாகப் பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று மீண்டும் இணைகிறார் முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்துச் சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைகிறார்.


