
செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தால் வேலைவாய்ப்பு பாதிக்காது என்றும், அது மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய தொழில்நுட்பம் என்றும் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவ, சோகோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “மாணவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம் என்று குறிப்பிட்டார். Zoho நிறுவனம் சார்பில் மருத்துவத்துறையில் நிறைய முதலீடுகளைச் செய்துள்ளதாகவும், முதற்கட்டமாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யும் இயந்திரம் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருக்கும்போது தமிழில்தான் பேச வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். ஜெர்மனி, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் தாய்மொழியிலேயே கல்வி கற்பிப்பதாகவும், இந்தியாவில் மட்டும் நம் மொழியைப் பேசினால் தரக்குறைவாக நினைப்பதாகவும் கூறிய அவர். இந்த நிலையை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.




