எடப்பாடி அதிமுக துரோகி; புதிய அணி தொடங்கும் செங்கோட்டையன்..!

Advertisements
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆன செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.  அப்பொழுது டிடிவி தினகரன் ஓபன்னீர் செல்வம் சசிகலா அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் இதற்கு, நான் பத்து நாள் கால அவகாசம் தருகிறேன் என்று கூறியிருந்தார்.
அதிமுகவில் திடீரென செங்கோட்டையன் எழுப்பிய கலக குரல் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து ஈரோடு மேற்கு புறநகர் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார் . இதன் பின்னர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த செங்கோட்டையன் ஒரு மாத காலமாக அமைதியுடன் காணப்பட்டார் தற்பொழுது ஓ பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் பசும்பொன் வந்த நிகழ்வு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியது .
அதிமுக கொடி கட்டிய காரில் ஓ பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் காரில் பயணித்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டது . இதனிடையே பசும்பொன்னில் டிடிவி தினகரன்,  ஓ பன்னீர்செல்வம்,  செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து பசும்பொன் தேவருக்கு ஒரே மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
இதனை தொடர்ந்து சசிகலாவும் தேவர் சிலைக்கு மரியாதை அளித்தார். அப்பொழுது செங்கோட்டையனிடம் உங்களை பொறுப்பில் இருந்து நீக்கியது எனக்கு வருத்தம் என தெரிவித்தார் . இதற்கு பதில் தெரிவித்த செங்கோட்டையன் என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார் .
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் ஆகிய மூவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்கள் . அப்பொழுது புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி மீண்டும் அமையும் அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தனர் .
இதனை தொடர்ந்து சசிகலா நிருபர்களை சந்தித்தபோது இனி எல்லாமே சர்ப்ரைஸ் ஆக இருக்கும் அதிர்ச்சி கலந்த இனிப்பு செய்திகள் இனி வந்த வண்ணம் இருக்கும் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி அமையும் என்று குறிப்பிட்டார் . இந்த நிலையில் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் முற்றிலுமாக நீக்கப்பட்டார் . இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் எடப்பாடி பழனிச்சாமியால் வெளியிடப்பட்டது .
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களை சந்திப்பதாக சொல்லி இருந்தார். அதன்படி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களை சந்தித்து பேசினார் .
முன்னதாக அவரது அலுவலகம் முன்பு மிகப்பெரிய அளவில் அதிமுக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.  அதில் எடப்பாடி பழனிச்சாமி படமும் இருந்தது நேற்று இரவு ஆக எடப்பாடி பழனிச்சாமி படத்தை மறைத்து ஜெயலலிதா படம் ஒட்டப்பட்டு இருந்தது .
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியை விட்டு நீக்கியது குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்தார். இன்று காலை 11 மணியளவில் அவர் நிருபர்களை சந்தித்து பேசும்போது , 1975 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் நான் பங்கேற்றேன் அந்த பொதுக்குழுவை சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்ஜிஆர் பாராட்டு பெற்றவன் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா வாலும் பாராட்டப்பட்டவன் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன் .
அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிச்சாமி ஏற்காத நிலையில் தான் கடந்த ஐந்தாம் தேதி மனம் திறந்து பேசினேன் தொடர் தோல்விகளால் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தேன் . அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து . 2019 2021 2024 ஆகிய தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுகளால் அதிமுக தோல்வியை தழுவியது .
தோல்வியே இல்லை என்ற நிலையில் இருந்தவர் எம்ஜிஆர் எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்க்கு பரிந்துரை கடிதம் வெளியிட்டவன் நான் . தற்பொழுது திமுகவிற்கு நான் உறுதுணையாக இருப்பதாக என்னை நீ டீம் என்று எடப்பாடி கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.  நீ டீம் யார் என்பது நாடறியும் இன்று வரையில்,  நான் பி டீமில் இல்லை யார் பி டீமில் இருக்கிறார் என்பது வெளி உலகத்திற்கு நன்றாக தெரியும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன்.
கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் அதிமுகவிலிருந்து என்னை நீக்கியது மிகவும் வருத்தம் அளிக்கிறது கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன்.  அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தி விழாவில் டி டி வி தினகரன் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்தேன் .
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளரான பிறகு அவர் எடுத்த தவறான முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்புகளை இழந்தது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கு எம்எல்ஏக்களின் ஒப்புதலை பெற்றுக் கொடுத்தேன் அவர் முதலமைச்சர் ஆவதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்தேன். எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதிமுக வலிமையாக  இருக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் தான் ஓபிஎஸ் டிடிவி தினகரன் சசிகலாவை சந்தித்தேன். அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தேன் .
சட்ட விதிகளின்படி அதிமுகவிலிருந்து என்னை நீக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தற்போது சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் . கட்சியை விட்டு என்னை நீக்கியது தொடர்பாக நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவேன் .
கொடநாடு வழக்கு தொடர்பாக அவர் மீது திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமியும் இதுகுறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை . கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி ஏ ஒன் குற்றவாளி ஆவார். கடந்த தேர்தல்களில் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது . இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் . கட்சியை ஒருங்கிணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியும்.
கட்சியிலிருந்து என்னை நீக்கியது தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார் . இதனிடையே செங்கோட்டையன் தலைமையில் டிடிவி தினகரன்,  ஓ பன்னீர்செல்வம் , சசிகலா ஆகியோர் ஒருங்கிணைந்து அதிமுகவில் புதிய அணியை உருவாக்கலாம் என்று பேசப்படுகிறது என்பது முக்கிய தகவலாகும்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *