டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

Advertisements

சென்னை: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திராகாந்தி, லால்பக தூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கிய தமிழர். 1940ல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர். ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக் கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குரலாக ஓ.பி.எஸ். இருக்கிறார். கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1-ந்தேதி ஓ.பி.எஸ். ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்வதை தடுக்கிறார்கள். இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தக்காளி, இஞ்சியை கண்ணீல் பார்க்க முடிய வில்லை. டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது. எந்த மாநிலத்திலாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா? தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று விடுவார்கள். ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *