Tvk party song,:நாட்ட அழிச்சி கூறு போடும்.. நரிகள் கூட்டம்; பாடல் மூலம் ஆளும் கட்சியை தாக்கினாரா விஜய் ?

Advertisements

தளபதி விஜய் இன்று காலை தன்னுடைய கட்சியின் கொடி, மற்றும் பாடலை வெளியிட்டுள்ள நிலையில்… இரண்டுமே தற்போது சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தளபதி விஜய் இன்று காலை, மிகவும் சீக்ரெட்டாக வைத்திருந்த தன்னுடைய கட்சி கொடியை வெளியிட்டார். இந்த கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்த நிலையில்… நடுவே இரண்டு பக்கமும் யானைகள் இருக்க, சென்டராக வாகை பூவின் படம் இடம்பெற்றிருந்தது. இதை தொடர்ந்து வெளியான த.வெ.க கட்சியின் பாடல் மூலம், மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்துள்ளார் தளபதி. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, தமன் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

இந்த பாடலில் பல்லவியில்… ”
நாம் என்ற வார்த்தைகொண்டு உயர்ந்தார் அண்ணா..
நாடெங்கும் வாழ்த்த நாளை
ஜெயிப்பார் அண்ணா
வா நண்பா தமிழரெல்லாம்
சேர்ந்தோமென்னா
வாடாத வாழ்க்கை இங்கே தருவாரண்ணா.. என்கிற வரிகள் இடம்பெற்றுள்ளன.

Thalapathy Vijay TVK party Song mma
அனுபல்லவியில்..
அடிமை வாழ்வு
போதும் போதும்
இனிமே நடக்க
இருக்கா ஏதும்…?
நாட்ட அழிச்சி
கூறு போடும்..
நரிகள் கூட்டம்
தெறித்தே ஓடும்…
ஊமையைப்போல்
நாமிருந்தா
ஊர்செழித்து
முன்னேறுமா..?
பேரலைபோல்
எழ மறந்தா
பேரவலம்
தொடரும் அம்மா.. என நேரடியாக ஆளும் கட்சியை தாக்குவது போல் இந்த வரிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சரணம்-01:
தமிழா தமிழா
பயந்து ஓடாதே…
தலைவன் தலைவன்
பிறந்தான் வாடாதே…
தடைகள் உடையும்
துயரம் தூளாகும்..
தயங்கி நின்றால்
விடிய நாளாகும்..
‘நாளைய தீர்ப்பு’
தந்தவன் பின்னே
நாளைய தமிழகம்
எழுந்து நிற்போமே…
நாடி நரம்பு
உயிர் உணர்வெல்லாம்

தளபதி விஜய்க்கே
என்றுரைப்போமே…
கவலை யாவும்
மறைந்து போக
இளைய கலைஞன்
எழுந்தான்..
எம்ஜியாரு
ரஜினிபோல
ஏழை மனதில்
கலந்தான்..
தமிழன் தனது
பெருமை மறந்து
ஆளும் தகைமை
இழந்தான்…
நமது தலைவன்
வாகைசூட
எழுமே எங்கள்
இனந்தான்…
நாடறிந்த பலரிருந்தும்
நமக்கெனவே
இங்கே யாருமில்லை..
ஏழசனம் மாலையிட
வந்தாரய்யா
“எங்க வீட்டுப்பிள்ளை”.!

சரணம்-02
தலைவா நீதான்
எங்கள் எதிர்காலம்
கோட்டை வென்று
போடு புதுக்கோலம்..
தமிழே தமிழே
எங்கள் அடையாளம்
ஒருநாள் தமிழும்
இந்த உலகாளும்…
தமிழன் பெருமை
தமிழன் உணர்ந்தால்
உலகில் உலகில்
அவன்போல் யாரு…?
எமக்குள் நாமே
சண்டைகள் செய்தால்..
தொடரும் எங்கள்
துயர் வரலாறு ..
கடந்தகாலம்
கடந்துபோச்சு
நடந்த கதைகள்
விடுவோம்..
இன்று நாங்கள்
இணைந்து நாளும்
புதியவிதைகள்
நடுவோம்
மக்கள் வாழ்வை
சுரண்டுவோரை
குப்பை மடுவில்
இடுவோம்..
மானமுள்ள
தலைவன் பின்னே
போனால் உயர்வை
தொடுவோம்..
மூன்றெழுத்தில்
எம் மூச்சிருக்கும்
அண்ணன் இன்றி
நாங்கள் இல்லை ..
வா திரண்டு
போர் தொடுப்போம்
எம்மை வெல்ல
இங்கு யாருமில்லை. என முழு பாடலிலும் ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *