தேமுதிக-வின் 14 தொகுதி டிமாண்ட்..!

Advertisements
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அதிமுக சார்பிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவை கூட்டணி சேர்ப்பதில் இழுபறி நீடிப்பது ஏன் என்பது குறித்து பேசியிருக்கிறார்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதமே இருக்கும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இன்னமும் தனது கூட்டணி தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கவில்லை. இது பற்றி பிரேமலதா விஜயகாந்த் பேசும் பொழுது கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி முடிவு செய்யவில்லை இந்த நிலையில் தேமுதிக மட்டும் கூட்டணியை உடனடியாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று பேசி வருகிறார்.
ஆனால் திரை மறைவில் அவரது பேச்சு வார்த்தையும் பேரமும் உடன்படாத காரணத்தால் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ப்பதில் தயக்கம் காட்டி வருகின்றன என்பதுதான் உண்மை நிலவரமாக பார்க்கப்படுகிறது
இதற்கிடையே தற்பொழுது  திமுகவுடன் இறுதி கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. எட்டு சட்டமன்ற தொகுதிகள் தருவதாகவும் ஒரு ராஜ்யசபா பதவி தருவதாகவும் மேலும் தேர்தல் செலவை ஏற்பதாகவும் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஒரு சில தினங்களில் முடிவெடுத்து சொல்வதாக பிரேமலதா விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்
இந்த நிலையில் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்களில் பலர் தேமுதிகவை நமது கூட்டணியில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் நமக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும் என்கிற ரீதியில் பேசியிருக்கின்றனர்
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியும் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் அவர் பேசும் பொழுது தேமுதிக சார்பில் ஏராளமான கோரிக்கைகள் வைக்கிறார்கள் குறிப்பாக 14 தொகுதிகள் கேட்கிறார்கள் ஆனால் 14 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்கும் சூழ்நிலை இல்லை இருந்தபோதிலும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எந்த வகையிலும் வெற்றி வாய்ப்பை இழப்பதற்கு அதிமுக தயாராக இல்லை. விரைவில் தேமுதிக தொடர்பாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். சில நிபந்தனைகளுக்கு தேமுதிக சம்மதம் தெரிவித்தால் ஒரு சில தினங்களில் இந்த கூட்டணி பற்றிய அறிவிப்பு வரும் மற்றபடி ஏற்கனவே அமைக்கப்பட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணி செய்யுங்கள் என பேசி இருக்கிறார்
இதனை தொடர்ந்து அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பிரேமலதா விஜயகாந்த்தை மீண்டும் சந்தித்து பேசுவதற்கான திரை மறைவு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
தற்பொழுது ஏற்கனவே திமுக தரப்பில் இறுதி கட்ட முடிவு செய்து வைத்திருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அடுத்த கட்டமாக அதிமுகவிலிருந்து வரும் அழைப்பை ஏற்று திமுக அல்லது அதிமுக இரண்டில் எது தனக்கு சாதகமாக இருக்குமோ அது குறித்து முடிவெடுப்பார் என தற்போது தகவல் தெரியவந்திருக்கிறது.
தேமுதிகவை பொறுத்த வரையில் வாக்கு வங்கி என்பது மிக குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை வாக்குகள் இருக்கிறது என்பதாலும் மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் மிகவும் பயன்படுவார் என்பதாலும் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன
சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் பெண்களின் வாக்கு வங்கி என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாடு அளவில் பெண் பேச்சாளர்களோ பெண் தலைமையோ இல்லாத சூழ்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் தங்களுக்கு சாதமாக இருக்கும் என திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர்பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *