
இஸ்ரேலுக்கு இரக்கமே இல்லையே என்று சர்வதேச நாடுகள் கேட்கும் அளவிற்கு காஸா மீது தாக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்கள் படும் துயரங்களுக்கு எல்லையே இல்லனுதான் சொல்லனின்.ஹமாஸ் இயக்கத்தினரை வேறோடு அழிக்க போவதா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கங்கணம் கட்டிகொண்டு இருக்கிறார் .
இந்த போரில் அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2025 வரை 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்கள் கொடூரமா கொல்லப்பட்டுள்ளனர்.1 கொடியே 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இவர்களில் பலர் தங்கள் உடல் உறுப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பித்து தங்கள் வீடு, உடைமைகளை விட்டு விட்டு தஞ்சம் தேடி பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.உயிர் தப்பியவர்கள் தங்குவதற்கும், உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் வழியின்றி தவித்து வருகிறார்கள் .
பாலஸ்தீனியர்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் வரை பலவும் உதவிக்கரம் நீட்ட முன்வந்தன. ஆனால் இஸ்ரேலிய படைகள் நிவாரணம் கிடைக்காமல் தடுத்து நிறுத்தி வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அனைவரது நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளன.
அவசர கால அடிப்படையில் பாலஸ்தீனிய மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு போதிய நிவாரண உதவிகள் வழங்கவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணி முகமை (UNRWA) பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறது. அதில், இஸ்ரேலிய ராணுவப் படைகளின் அதிதீவிர தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்து வருகிறது.
அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஐக்கிய நாடுகள் நிவாரணம் மற்றும் பணி முகமையின் நிவாரண உதவிகள் செல்வதற்கு கடந்த 7 மாதங்களாக தடை தொடர்கிறது. புதிதாக தங்குமிடங்கள் அமைப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தஞ்சமடைய வெளியேறிய வண்ணம் இருப்பதால் புதிதாக இடம் தேடுவது சவாலாக மாறியுள்ளது. அப்படியே கிடைத்தாலும் ஒரு குடும்பத்திற்கு தேவையான கூடாரம் அமைப்பதற்கு கூட யாரிடமும் கையில் காசு இல்லை.
காஸா மக்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள், எப்படி தங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வார்கள் என்பது ஒரு வருத்தத்திற்குரிய கேள்வியாகி எல்லோர் மனதிலும் எழுந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


