
சென்னை:
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் 3ம் பாலினத்திற்கும், LGBTQ பிரிவினருக்கும் எதிராக அடிக்கடி கருத்து தெரிவிக்க கூடியவர். அந்த வகையில் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதன்படி FBI அமைப்பில் இருக்கும் பாலின, இன ரீதியிலான துறையை மூட முடிவு செய்துள்ளார். இந்த FBI பிரிவு பாலின ரீதியிலான குற்றங்கள், இன அதாவது கறுப்பின, வெள்ளையின ரீதியிலான குற்றங்களை மட்டும் விசாரிக்கும். இதை நீக்க முடிவு செய்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அமெரிக்காவின் எப்ஃபிஐ தலைவராக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த முறை அவரின் ஆட்சியில் அவருக்கும் எஃப்பிஐ தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு மோதல்கள் நிலவி வந்தன.
அந்த மோதல்களைச் சரி செய்யும் விதமாக இந்த முறை தனக்கு நெருக்கமான… இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேலை அந்தப் பதவிக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
குஜராத் பின்புலத்தை சேர்ந்த காஷ்யப் காஸ் பட்டேல் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் பல அரசு ரீதியான பணிகளைச் செய்துள்ளார். முக்கியமாக வழக்கறிஞரான இவர்… பல அரசு தொடர்பான வழக்குகளில் வாதாடி உள்ளார்.
இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கம்.சமீபத்தில் அமெரிக்காவை உலுக்கிய எப்ஸ்டீன் லிஸ்ட்டை முழுமையாக வெளியிடும் திட்டத்தில் இவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முழுமையாக அந்த லிஸ்டை வெளியிட வேண்டும் என்று எப்ஃபிஐ அமைப்பைக் கோரிக்கை வைத்து வந்தார். இப்போது அவரே அதன் தலைவராகும் நிலையில் விரைவில் அந்த லிஸ்டை முழுமையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் முக்கிய முடிவு:
ஏற்கனவே அதிபராகப் பதவி ஏற்ற முதல் நாளே LGBTQ பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 20ம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளார். அதன்படி “திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன்” என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்து உள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பல பாலின கொள்கைகள் அதிகரித்து வருகின்றன. ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டிப் பல பாலின பிரிவுகள் அது தொடர்பான கொள்கைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய சட்டங்களைக் கொண்டு வர உள்ளாராம். ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்றதும் இதற்கான அறிவிப்புகளை வெளியிடுவாராம்.
ஆண், பெண், மூன்றாம் பாலினம் தாண்டி உலகம் முழுக்க பல பாலின கொள்கைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் இந்தப் பல பாலின கொள்கைகள் உச்சம் பெற்றுள்ளன.
முக்கியமாக ஆணாக உணரும் பெண்கள், பெண்ணாக உணரும் ஆண்கள், இருபாலினமாக உணரும் ஆண்கள் என்று பல கொள்கைகள் உருவாகி உள்ளன. தங்கள் “பலர்” என்று குறிப்பிட விரும்பும் பலரும் உள்ளனர்.
உலகம் முழுக்க முப்பாலினம் என்பது தாண்டித் தற்போது LGBTQ என்ற பதம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக LGBT, LGBT+, LGBTQ+, மற்றும் LGBTQIA+ எனப் பல வார்த்தைகளால் இந்தப் பதம் அழைக்கப்படுகிறது.
அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் மாற்று பாலின பிரிவுகளைக் கொண்டவர்களை அழைக்க இந்தப் பதம் பயன்படுத்தப்படும்.
அமெரிக்க போன்ற நாடுகளில் இந்த LGBTQ பிரிவினர் அதிகம் உள்ளனர். அங்கே கொள்கைகள் இன்னும் வெளிப்படையாக இருப்பதால் LGBTQ பிரிவினர் இன்னும் வெளிப்படையாக இயங்க முடிகிறது.
அதோடு இப்போது மக்கள் தங்களை வேறு பாலினமாக அடையாளம் செய்யும்… வேறு உயிரினமாக அடையாளம் செய்யும் வழக்கம் ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக ஒரு ஆண் தன்னை பெண்ணாக அடையாளம் செய்யும் வழக்கம் போலவே… ஒரு பெண்… தன்னை ஒரு பறவையாக… டிராகனாக அடையாளப்படுத்திக்கொள்ளும் நிலையும் உள்ளது.
அமெரிக்காவில் இந்த வழக்கம் உச்சம் அடைந்து உள்ளது. பலர் இதைப் பின்பற்றும் நிலையில்… ஒருசாரார் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் இந்தக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
