Election Commission Announces: மத்திய பிரதேசத்தில் மறுவாக்குப்பதிவு!

Advertisements

மத்திய பிரதேசத்தில்  சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

அட்டர்  தொகுதியில் உள்ள கிசுபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்ற போது சிலர் வாக்களிக்கும் வீடியோக்களை ரகசியமாக படம் பிடித்துள்ளனர். தேர்தலில் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அங்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிந்த் மாவட்டத்தில் உள்ள அட்டெர் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிசுபுராவில் போலிங் பூத் எண் 71 -ல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை  வரும் செவ்வாய்க் கிழமை மறு வாக்குப்பதிவு நவம்பர் 21- ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப் பதிவின் போது வாக்காளர்கள் நடுவிரலில் அழியாத மை தடவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுவாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதிரி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்திரப்பிரதேசம் பிஹின்ந் மாவட்டம், கிஷுபுராவில் நடந்த  சம்பவம்  தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க தவறிய  நான்கு போலிங் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *