
ஆதிதிருவரங்கம் கோவில்:
ரங்கநாத சுவாமி கோயில் இந்தியா, தமிழ்நாடு, சங்கராபுரம் வட்டத்தில் உள்ளது. இது திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலாகும். இக்கோயிலானது திராவிடக் கட்டிடக்கலை கொண்டு இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, பின்னர் விஜயநகர அரசர்கள் காலத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் வளாகம் 5 ஏக்கர்கள் (20,000 m2) பரப்பளவில் உள்ளது. இங்கு ஒரு வரலாற்றுக் கால தானிய சேமிப்புக் களஞ்சியம் உள்ளது. விவசாய களஞ்சியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இந்த ரங்கநாத பெருமாள் மகாபலிச் சக்ரவர்த்தி மற்றும் ஆழ்வார்களுக்கு முற்பட்டவராக நம்பப்படுகிறது.

தானிய களஞ்சியம்;
ஆதிதிருவரங்கம் திருத்தலத்தில் ஆலயத்தின் தானியக்களஞ்சியம் பிரமாண்ட தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நெற்களஞ்சியம், மூன்று பாகமாகப் பிரிக்கப்பட்டு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. கீழ்ப்பாகம் நெல்தானியமும், நடுபாகம் கம்பும், மேல்பாகம் கேழ்வரகு தானியங்களும் சேமித்து வைக்கப்பட்டன. வறட்சி காலங்களில் சேமித்து வைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அன்னதானம் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. நெற்களஞ்சியத்தின் மேற்பாகத்தில், அன்னலட்சுமி தாயார் சிலை சிறப்பாக அமையப் பெற்றுள்ளது.
திருத்தல வரலாறு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. முதல்யுகம் மற்றும் முதலவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. எம்பெருமான் வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் இவற்றை அருளுவார் என்பது சிறப்பு.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது. அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார்.
அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியிள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீதி வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு கூறுவதாக சொல்லப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறுள்ளது. இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. கிருஷ்ணர் ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார்.
கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் ‘கிருஷ்ணாரண்யம்’ என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென் கரையோரம் மேட்டுப் பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்ற மும் இதை உராய்ந் தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சி யாய் இன்பம் அளிக்கிறது.
நைவேத்தியம்:
ஆதி திருவரங்கம் ரங்கநாதர் சுவாமிக்கு தினமும் நைவேத்தியமாக சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.
கோவில் விழாக்கள்
சித்திரை; வசந்த உற்சவம்
வைகாசி; வைகாசி விசாகம்
ஆனி; சந்தன தைலத்தால் எண்ணெய் காப்பு-
ஆனி;த்திருமஞ்சனம்,
ஆடி; பெண்ணெ நதிக்கரையில் ஆடிப்பெருக்கு, ஆவணி கிருஷ்ண ஜெயந்தி,
புரட்டாசி; நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி,
ஐப்பசி தீபாவளி,
கார்த்திகை கார்த்திகை தீபம்,
மார்கழி; திருப்பாவை, தெருபஜனைகள், பரமபதவாசல் திறப்பு.
மாசி ; கெடிலம் ஆறு ஆரம்ப இடமான 30 கி.மீ. தொலைவில் உள்ள மையனூர் கிராமம் சென்று கருட தீர்த்தம் கொண்டு வந்து உற்சவருக்கு அபிஷேகம், வீதி உலா கோயிலுக்கு திரும்புதல்.
பங்குனி; பிரம்மோற்சவம்.

பயண வழி;
ஆதிதிருவரங்கம் ஆலயம் திருக்கோவிலூர் அருகே அமைந்துள்ளது. திருக்கோவிலூர் நகரத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் & ரெயில்கள் உள்ளன. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலையில் இருந்து நிறைய பஸ்கள் திருக்கோவிலூருக்கு செல்கின்றன. எனவே ஆதிதிருவரங்கம் கோவிலுக்கு செல்பவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி சென்று மிக எளிதாக செல்ல முடியும். சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு நேடியாக திருக்கோவிலூருக்கு நேரடி பஸ் வசதி உள்ளது.
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் 38 கி.மீ. தொலைவில் உள்ளது.
திருக்கோவிலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆதிதிருவரங்கம் ஆலயம் இருக்கிறது. திருக்கோவிலூரில் இருந்து டவுன் பஸ், ஆட்டோக்கள் இருக்கிறது. சமீபத்தில் கொங்கு மண்டல பகுதிகளை இணைக்கும் வகையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மூலவர் : ரங்கநாதன பெருமாள்
அம்மன் / தாயார் :
ரங்கநாயகித் தாயார்
தல விருட்சம் : புன்னாக மரம்.
தீர்த்தம் : பெண்ணையாறு




