Actress Trisha: டாப் நடிகருக்கு ஜோடியாகும் நடிகை த்ரிஷா!

Advertisements

நடிகை த்ரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு வரும் நிலையில், தற்போது தேசிய விருது நடிகருக்கு ஜோடியாக நடிக்க, பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலுமே கடந்த 20 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே சரியான வாய்ப்பு கிடைக்காமல், தன்னுடைய சம்பளத்தை பாதியாகக் குறைத்து கொள்ளும் அளவுக்கு நடிகை த்ரிஷா நிலை இருந்த நிலையில், பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகை த்ரிஷா குந்தவையாக நடித்த பொன்னியின் செல்வன்… மீண்டும் த்ரிஷாவை லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வரும் த்ரிஷா… தளபதி விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘லியோ’ படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து, வரிசையாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களில் நடிக்கக் கமிட் ஆகி வருகிறார். தன்னுடைய சம்பளத்தையும் இரண்டு மடங்கு உயர்த்தி விட்டதாகக் கூறப்பட்டது.

தற்போது  கமல்ஹாசன் உடன் ’தக்லைஃப்’, அஜித்துடன் ’விடாமுயற்சி’, மோகன் லாலுடன் ’ராம்’, சிரஞ்சீவி உடன் ’விஸ்வாம்பரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல் கோட் படத்திலும் விஜய்யிடம் சேர்ந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கை நிறைய வாய்ப்புகளுடன் படு பிசியாக நடித்து வரும், த்ரிஷாவுடன்… அட்லீ இயக்கத்தில்,  அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் த்ரிஷா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜவான் வெற்றிக்குப் பின்னர், புஷ்பா பட நாயகனும்… தேசிய விருது நடிகருமான அல்லு அருஜுனை வைத்து இயக்கும் படத்தின் பணிகளில் அட்லீ தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *