Sridevi: திரையுலக சாதனைகளைக் தன்வசப்படுத்தியவர்!

Advertisements

Sridevi

மறைந்தாலும் திரையுலக சாதனைகளைக் தன்வசப்படுத்திய நடிகை ஸ்ரீ தேவி…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயினாகி, தமிழில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த இவர் இந்தியில் தென்னிந்திய நடிகைகளால் ஜெயிக்கவே முடியாது என்று கணிக்கப்பட்டு இருந்த காலத்தில், பாலிவுட்டில் புயல் போல் நுழைந்து, இந்தியப் படவுலகின் கனவுக்கன்னியாக மாறிய ஸ்ரீ தேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதல் திருமணம் செய்தபிறகு மும்பையில் குடியேறினார். அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இரண்டுபேரும் தற்போது ஹீரோயினாக நடிக்கின்றனர்.

கடந்த 2000ல் திரையுலகை விட்டு விலகுவதாக அறிவித்த ஸ்ரீ தேவி, 12 வருட இடைவெளிக்குப் பின்பு, 2012ல் திரைக்கு வந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொகாடுத்தார். கடைசியாக அவர் நடித்த ‘மாம்’ என்ற படத்துக்காக அவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. 2018ல் துபாய்க்கு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஸ்ரீ தேவி, அங்குத் தங்கியிருந்த ஓட்டல் பாத்ரூமிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மறைவு இந்திய திரையுலகையே அதிர வைத்தது. இந்தநிலையில், நேற்று ஸ்ரீ தேவியின் 60வது பிறந்தநாள் அவரது ரசிகர்களால் நாடு முழுவதும் எளிமையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டது. ஸ்ரீ தேவியின் திரையுலக சாதனைகளைக் கவுரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டு இருந்த அந்த டூடுல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இணையதளங்களில் வைரலானது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *