
Actress Raashi Khanna : புதுடில்லியில் பிறந்து இன்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் தான் ராஷி கண்ணா, அவருக்கு வயது 33.
டெல்லியில் பிறந்து அங்கேயே தனது பட்டப்படிப்பை முடித்த பிரபல நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “மெட்ராஸ் கஃபே” என்கின்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாகப் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” என்கின்ற திரைப்படம் தான் தமிழில் ராஷி கண்ணா நடித்த முதல் திரைப்படம். அந்தப் படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அவர் தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
“அடங்கமறு”, “அயோக்கியா” மற்றும் “துக்ளக் தர்பார்” போன்ற படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, இறுதியாகத் தமிழில் இந்த 2024ம் ஆண்டில் வெளியாகி, மெகா ஹிட் படமாக மாறிய சுந்தர் சி-யின் “அரண்மனை 4” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்பொது தொடர்ச்சியாக ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா, தற்பொழுது தமிழிலும் “மேதாவி” என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.


