Actress Mrunal Thakur : டிசைனர் சாரியில்.. மஹாராணி போல மின்னும் மிருனால் தாக்கூர்!

Actress Mrunal Thakur : மகாராஷ்டிராவில் பிறந்து, மராத்தி மொழி திரைப்படங்கள்மூலம் கலை உலகில் அறிமுகமான இளம் நடிகை தான் மிருனால் தாக்கூர் அவருக்கு வயது 32.

மகாராஷ்டிராவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த மிருனால் தாக்கூர், கடந்த 2014ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான “ஹலோ நந்தன்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார். அதற்கு முன்னதாக அவர் மாடல் அழகியாகப் பல அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மிருனால் தாக்கூர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மொழி படங்களிலும், 2022 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரபல மலையாள திரையுலக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கடந்த 2022ம் ஆண்டு வெளியான “சீதா ராமம் என்கின்ற திரைப்படம் மிருனால் தாக்கூருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

இறுதியாகத் தெலுங்கு மொழியில் இந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான “கல்கி 2898 AD” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் மிருனால் தாக்கூர். தொடர்ச்சியாக ஹிந்தியில் மட்டும் ஐந்து திரைப்படங்களில் இப்போது அவர் பிஸியாக நடித்த வருகிறார். எதிர்வரும் 2025ம் ஆண்டு முடிவுவரை அவருக்கான கால்ஷீட் நீண்டு வருகிறது.

இன்னும் நேரடியாக எந்தவிதமான தமிழ் திரைப்படத்திலும் மிருனால் தாக்கூர் நடிக்கவில்லை என்றாலும், விரைவில் அவர் தமிழ் திரை உலகிலும் பல திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் மிருனால் தாக்கூர் பயணித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *