Ninaivellam Neeyada Movie: சிறுவர்கள் வெளியிட்ட “நினைவெல்லாம் நீயடா” படத்தின் பாடல்கள்!

Advertisements

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் பாடல்களைப் புதுச்சேரியில் சிறுவர்கள்  வெளியிட்டனர்.

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் படம் நினைவெல்லாம் நீயடா.இத்திரைப்படத்தில் உள்ள பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இப்படம் அவரது 1,417வது படம் ஆகும். இப்படத்தின்  கதாநாயகனாகப் பிரஜன், கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாகச் சினாமிகா அறிமுகமாகிறார்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள நிலையில் படகுழுவினர் புதுச்சேரியில் உள்ள பாண்டி மெரினாவில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர்.இதில் கதாநாயகன் பிரஜன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்ட நிலையில் பாடல்களைச் சிறுவர்கள் வெளியிட்டனர், இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புதுவை அரசு கலைமாமணி விருதாளர் குமரன் பிஆர்ஓ செய்திருந்தார்.

ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் பாடல்களைப் புதுச்சேரியில் சிறுவர்கள் வெளியிட்டது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் உள்ள பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *